Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போரில் கைகொடுக்காத Starlink: உக்ரைன் புகார்!

போரில் கைகொடுக்காத Starlink: உக்ரைன் புகார்!

முன்னறிவிப்பின்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சில ராணுவ நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உக்ரைனில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையின் சில பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால், ரஷ்யப் படைகளுக்கு எதிரான ட்ரோன் தாக்குதல்களும், ட்ரோன்களை இடைமறிக்கும் தற்காப்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்களை இயக்குவதற்கும், போர்க்களத்தில் தகவல் தொடர்பைப் பராமரிப்பதற்கும் ஸ்டார்லிங்க் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.

முன்னறிவிப்பின்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சில ராணுவ நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் செர்ஹி பெஸ்க்ரெஸ்ட்னோவ் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்கின் ராணுவப் பயன்பாட்டுக்கான ஸ்டார்ஷீல்டு சேவை, மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும்போது செயல்படுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் ஏழாவது விரைவு எதிர்வினைப் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினரும், ட்ரோன்கள் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போதுகூட 10 முதல் 20 விநாடிகள் வரை இணைய இணைப்பு துண்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ட்ரோன்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் கேட்க, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசு மற்றும் நேட்டோ அமைப்புடன் உக்ரைன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் சேவைக்கான சந்தா கட்டணத்தைச் செலுத்தும் போலந்தும் இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஸ்டார்லிங்க் சேவையின் வேகம் மற்றும் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க ராணுவமே தீர்மானிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

முந்தைய செய்தி
இந்தியன் வங்கியின் நிகர லாபம் 15% உயர்வு
அடுத்த செய்தி
ரஷ்யாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்

தொடர்புடைய செய்திகள்